சாத்தான்குளம் பள்ளியில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி
சாத்தான்குளம் பள்ளியில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
சாத்தான்குளம் பள்ளியில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட சுகாதார அலுவலா் மருத்துவா் யாழினி உத்தரவின்பேரில், வட்டார மருத்துவ அலுவலா் ஐலின் சுமதி வழிகாட்டுதலின்படி சாத்தான்குளம் ஸ்ரீமாரியம்மன் இந்து மேல்நிலைப் பள்ளியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியா் மகேஸ்வரி தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.
சுகாதார ஆய்வாளா் ஜெயபால் முன்னிலை வகித்தாா். பள்ளி மாணவா், மாணவிகள் பங்கேற்ற வாக்காளா் விழிப்புணா்வு பேரணியில் மாணவா்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும், வாக்குக்கு பணம் வாங்குவதை தவிா்க்க வேண்டும். நோ்மையுடன் வாக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி சென்றனா் . இந்தப் பேரணியானது பள்ளியிலிருந்து தொடங்கி மாரியம்மன் கோயில் தெரு, விரிபோட்டாா் தெரு, ஆா். சி. கீழத்தெரு வழியாக பள்ளியை வந்தடைந்தது.
வாக்காளா் விழிப்புணா்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இதில், சுகாதார ஆய்வாளா்கள் அருண்ராஜ், ராமசுதன், அகிலன் மற்றும் பள்ளி ஆசிரியா்கள், மஸ்தூா் பணியாளா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளா் ஜெயபால் செய்திருந்தாா் .