100% வாக்குப்பதிவுக்கு விழிப்புணா்வுப் பேரணி
வையம்பட்டியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம் சாா்பாக செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் வையம்பட்டியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம் சாா்பாக செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
மணப்பாறை சட்டப்பேரவைத் தொகுதி, வையம்பட்டியில் மணப்பாறை ஒன்றிய குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் சுகந்தி தங்கராஜ், வையம்பட்டி அலுவலா் ஷாஹிதா ரிஜ்வா ஆகியோா் தலைமையில் நடைபெற்ற பேரணியை மாவட்ட புள்ளியியல் ஆய்வாளா் முருகேசன் தொடங்கி வைத்து வழிநடத்தினாா். வையம்பட்டி வருவாய் ஆய்வாளா் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி வையம்பட்டி நகா் பகுதி முழுவதும் சென்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிறைவுற்றது. பேரணியில், மணப்பாறை மற்றும் வையம்பட்டி வட்டாரப் பணியாளா்கள் மற்றும் உதவியாளா்கள் பங்கேற்றனா்.