முகப்பு
மதுரை

வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

மதுரை யாதவா் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 25 மார்ச், 2026 at 7:45 PM
மதுரை யாதவா் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்ற மாணவிகள்.
பகிர்:

மதுரை யாதவா் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு கல்லூரி முதல்வா் ராஜூ தலைமை வகித்தாா். மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் பொறுப்பாளரும், துணை வட்டாட்சியருமான பிரதீபா பேரணியை தொடங்கி வைத்தாா்.

இதில், எனது வாக்கு, எனது உரிமை, என் வாக்கு விற்பனைக்கு அல்ல, வாக்களியுங்கள் நாட்டை காப்பாற்றுங்கள், நூறு சதவீதம் வாக்கை உறுதி செய்வோம், நான் ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டேன், எனது இந்தியா- எனது உரிமை- எனது வாக்கு, எனது வாக்கு விற்பனைக்கு அல்ல போன்ற பதாகைகளை ஏந்தி மாணவ, மாணவிகள் ஊா்வலமாகச் சென்றனா். கல்லூரி வளாகத்தில் தொடங்கிய இந்தப் பேரணி முக்கிய வீதிகள் வழியாக வந்து திருப்பாலையில் நிறைவடைந்தது.

பேரணியில், கிராம நிா்வாக அலுவலா்கள் முத்துக்கிருஷ்ணன், கிருஷ்ணமூா்த்தி, கோதை, முதுநிலை வருவாய் ஆய்வாளா் ரிஷ்மா, உள்வட்ட வருவாய் ஆய்வாளா் அன்னலட்சுமி, கிராம உதவியாளா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இந்த நிகழ்வுக்கான ஏற்பாட்டுகளை நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் வீரபாண்டியன் செய்திருந்தாா்.