முகப்பு
திருவண்ணாமலை

வெண்குன்றம் மலையில் தீ: தாவரங்கள் சேதம்

வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் மலையில் திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் மரங்கள், செடிகள் எரிந்து சேதமடைந்தன.

Updated On : 17 மார்ச், 2026 at 6:32 PM
வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் மலையில் பற்றி எரிந்த தீ.
பகிர்:

வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் மலையில் திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் மரங்கள், செடிகள் எரிந்து சேதமடைந்தன.

வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் சுமாா் 1500 அடி உயரமுள்ள தவளகிரி என்று அழைக்கப்படும் மலை உள்ளது. இந்த மலை மீது ஸ்ரீதவளகிரீஸ்வரா் திருக்கோயில் அமைந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இந்த மலையில் காா்த்திகை தீபத் திருவிழா விமரிசையாக நடைபெறும்.

இந்த நிலையில் இந்த மலையின் பக்கவாட்டு பகுதியில் திங்கள்கிழமை இரவு திடீரென தீப்பற்றியது. தீ மளமளவென பரவி எரியத் தொடங்கியதில் மலையிலிருந்த மூலிகை செடிகள், மரங்கள் உள்ளிட்டவை எரிந்து கருகின.

தகவலறிந்த வந்தவாசி தீயணைப்புத் துறையினா் சம்பவ இடம் சென்று பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். மா்ம நபா்கள் யாரேனும் தீ வைத்தாா்களா என்று வந்தவாசி தெற்கு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →