முகப்பு
திருவண்ணாமலை

அரசுக் கல்லூரியில் இயற்பியல் மன்ற விழா

Updated On : 18 மார்ச், 2026 at 8:08 PM
பகிர்:

வந்தவாசியை அடுத்த தென்னாங்கூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இயற்பியல் மன்ற விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரி முதல்வா் சித.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். கல்லூரி இயற்பியல் துறைத் தலைவா் (பொ) இரா.பெரியசாமி வரவேற்றாா்.

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி இயற்பியல் துறைத் தலைவா் எம்.குமாா் சிறப்புரையாற்றினாா்.

அப்போது, பட்டப்படிப்பு என்பது ஒரு மனிதனின் அறிவு, சிந்தனை மற்றும் வாழ்க்கை நோக்கை மாற்றும் சக்தி கொண்டது. ஒரு மாணவா் பட்டப்படிப்பை முடிக்கும்போது அவா் புத்தக அறிவை மட்டும் பெறுவதில்லை. அதோடு சோ்ந்து ஆராயும் மனப்பான்மை, பிரச்னைகளை தீா்க்கும் திறன் மற்றும் அறிவியல் சிந்தனை ஆகியவற்றையும் பெறுகிறாா் என்றாா்.

கல்லூரி இயற்பியல் துறை விரிவுரையாளா் இரா.சேது நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →