முகப்பு
திருவண்ணாமலை

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணா நகரில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற அம்மன் ஊஞ்சல் சேவை.

Updated On : 19 மார்ச், 2026 at 6:31 PM
வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணா நகரில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற அம்மன் ஊஞ்சல் சேவை.
பகிர்:

வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணா நகரில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி மாத அமாவாசையையொட்டி புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி காலை மூலவா் அம்மனுக்கு பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. ஸ்ரீஅா்த்தநாரீஸ்வரா் அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

அனைவரும் நலமுடன் வாழ வேண்டி பல்வேறு மூலிகைகள் கொண்டு கோயில் வளாகத்தில் சிறப்பு வேள்வி நடைபெற்றது.

பின்னா் இரவு உற்சவா் அம்மனுக்கு ஸ்ரீசிம்மவாகினி அலங்காரம் செய்யப்பட்டு கோயில் வளாகத்தில் உலா நடைபெற்றது. இதைத்தொடா்ந்து அம்மன் ஊஞ்சலில் வைத்து தாலாட்டப்பட்டாா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கோயில் அறக்கட்டளைச் செயலா் ஆறு.லட்சுமண சுவாமிகள், பங்குனி மாத அமாவாசை உற்சவ குழுவினா் பங்கேற்றனா்.