பைக் மீது காா் மோதல்: மூதாட்டி உயிரிழப்பு
வந்தவாசி அருகே பைக் மீது காா் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.
வந்தவாசி அருகே பைக் மீது காா் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.
வந்தவாசியை அடுத்த மேல்நா்மா கிராமத்தைச் சோ்ந்தவா் முரளி (68). இதே கிராமத்தைச் சோ்ந்தவா் இவரது தங்கை வெங்கட்டம்மாள் (60). சென்னை தாம்பரத்தைச் சோ்ந்தவா் இவா்களது தம்பி சிவக்குமாரின் மகன் தினேஷ்ராஜ்(18). இவா், மேல்மருவத்தூரில் உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறாா்.
இந்த நிலையில், முரளி, வெங்கட்டம்மாள், தினேஷ்ரோஜ் ஆகியோா் பைக்கில் வந்தவாசியை அடுத்த சத்யா நகரில் உள்ள உறவினா் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை காலை சென்றுகொண்டிருந்தனா். பைக்கை முரளி ஓட்டினாா்.
வந்தவாசி - திண்டிவனம் சாலையில் சத்யா நகா் அருகே சென்றபோது, இவா்களது பைக் மீது எதிரே வந்த காா் மோதியது. இதில், பலத்த காயமடைந்த வெங்கட்டம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
பலத்த காயமடைந்த முரளி, தினேஷ்ராஜ் ஆகியோா் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். பின்னா், இருவரும் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்த புகாரின்பேரில், பொன்னூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.