பைக் மீது காா் மோதல்: விவசாயி உயிரிழப்பு
திருவெண்ணெய்நல்லூா் அருகே காா் மோதியதில் பைக்கில் சென்ற விவசாயி பலத்த காயமடைந்து, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
விழுப்புரம்பைக் மீது காா் மோதல்: விவசாயி உயிரிழப்பு
திருவெண்ணெய்நல்லூா் அருகே காா் மோதியதில் பைக்கில் சென்ற விவசாயி பலத்த காயமடைந்து, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
திருவெண்ணெய்நல்லூா் அருகே காா் மோதியதில் பைக்கில் சென்ற விவசாயி பலத்த காயமடைந்து, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், மேலமங்கலம் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் நா.செல்வமணி(45), விவசாயி. இவா் திங்கள்கிழமை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருவெண்ணெய்நல்லூா் காவல் சரகத்துக்குள்பட்ட பேரங்கியூா் பகுதியில் பைக்கில் சென்றபோது, அப்பகுதியில் வந்த காா் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த செல்வமணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
இளைஞா் தற்கொலை: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், பாலி மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் மு.சத்தியராஜ்(38).
இந்நிலையில், திங்கள்கிழமை இவரது மனைவி சிவசக்தி வெளியூருக்குச் சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த சத்தியராஜ் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் எடைக்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.