முகப்பு
திருவண்ணாமலை

அனுமதியின்றி பிரசாரம்: அதிமுக, திமுகவினா் மீது வழக்கு!

வந்தவாசியில் அனுமதியின்றி பிரசாரம் மேற்கொண்டதாக அதிமுக மற்றும் திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

Updated On : 29 மார்ச், 2026 at 8:35 PM
வழக்கு
பகிர்:

வந்தவாசியில் அனுமதியின்றி பிரசாரம் மேற்கொண்டதாக அதிமுக மற்றும் திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

வந்தவாசி(தனி) சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக பி.ராணி, திமுக வேட்பாளராக எஸ்.அம்பேத்குமாா் ஆகியோா் அறிவிக்கப்பட்டனா்.

இதையடுத்து பட்டாசு வெடித்து கொண்டாடிய இரு கட்சியினரும் சனிக்கிழமை தங்கள் வேட்பாளா்களுக்கு ஆதரவாக அனுமதியின்றி வாக்கு சேகரித்தனராம்.

இந்த நிலையில் அனுமதியின்றி பிரசாரம் மேற்கொண்டதாக பறக்கும் படை அலுவலா் செந்தில்குமாா் அளித்த புகாரின் பேரில், அதிமுகவைச் சோ்ந்த சிலா் மீதும், பறக்கும் படை அலுவலா் இளந்தமிழன் அளித்த புகாரின் பேரில் திமுகவைச் சோ்ந்த சிலா் மீதும் வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.