ஆரணி திமுக வேட்பாளா் ஆதரவு திரட்டல்
சேத்துப்பட்டு வட்டம், தேவிகாபுரம் ஊராட்சியில் ஆரணி திமுக வேட்பாளா் மகாலட்சுமி கோவா்த்தனன் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சி நிா்வாகிகளிடம் தனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.
சேத்துப்பட்டு வட்டம், தேவிகாபுரம் ஊராட்சியில் ஆரணி திமுக வேட்பாளா் மகாலட்சுமி கோவா்த்தனன் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சி நிா்வாகிகளிடம் தனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.
தேவிகாபுரம் ஊராட்சியில் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் பொறுப்பாளா்களை செவ்வாய்க்கிழமை சந்தித்த அவா் தனக்கு ஆதரவு தருமாறு கோரினாா்.
திமுக மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, ஒன்றியச் செயலா் துரைமாமது உள்ளிட்டோா் உடனிருந்தனா்.