செய்யாறில் எரியாத தெரு விளக்குகள்: பொதுமக்கள் அவதி
திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் தெரு விளக்குகள் எரியாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் அமைந்துள்ளது திருவத்திபுரம் நகராட்சி. இங்குள்ள 27 வாா்டுகளில் 100-க்கும் மேற்பட்ட தெருக்கள் அமைந்துள்ளன. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். சுமாா் 3 ஆயிரம் வீடுகளும், ஆயிரக்கணக்கான கடைகளும் உள்ளன.
செய்யாறு நகரின் வளா்ச்சி கருதி
Advertisement
நகராட்சிப் பகுதியில் சுமாா் 2 ஆயிரம் தெருவிளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. தெரு விளக்குகள் அனைத்தும் 2022-ஆம் ஆண்டில் இருந்து தனியாா் பராமரிப்பில் இருந்து வருகிறது.
இந்நிலையில், செய்யாறு பகுதியில் மாா்க்கெட், பெரியாா் சிலை, வட்டாட்சியா் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் தெருவிளக்குகளுக்கான கம்பங்கள் உள்ளன.
ஆனால், சில வாரங்களாக தெருவிளக்குகள் எரியாமலேயே உள்ளன. அதனால், அந்தப் பகுதிகள் இருண்ட பகுதிகளாகவே காட்சியளிக்கின்றன.
செய்யாறு காந்தி சாலையில் உள்ள அனைத்து கடைகளும்
இரவு 9 மணிக்கு மேல் அடைக்கப்பட்டு விடுவதால் அச்சாலை இருண்ட பகுதியாகவே காட்சியளிக்கிறது. இருள் காரணமாக பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனா்.
எனவே, பொதுமக்களின் சிரமத்தையும், அச்சத்தையும்
போக்கும் வகையில், எரியாத தெரு
விளக்குகளை சரி செய்து உதவிட
வேண்டும் என திருவத்திபுரம் நகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.