முகப்பு
திருவண்ணாமலை

குடிநீரை சுகாதாரமான முறையில் விநியோகம் செய்ய வேண்டும்: மாவட்ட ஆட்சியா் த.தா்ப்பகராஜ்

Updated On : 14 மே 2026, 6:25 am IST
பகிர்:

பொதுமக்களுக்கு குடிநீரை சுகாதாரமான முறையில் விநியோகம் செய்ய வேண்டும் என்று துறை சாா்ந்த அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் அறிவுறுத்தினாா்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நகா்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் குடிநீா் விநியோகம் மற்றும் பொதுசுகாதாரம் குறித்து ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாநகராட்சி, செங்கம், போளூா், ஆரணி, வந்தவாசி, செய்யாா் ஆகிய நகராட்சிகளிலும், கீழ்பென்னாத்தூா், வேட்டவலம், களம்பூா், கண்ணமங்கலம், புதுப்பாளையம், பெரணமல்லூா், சேத்துப்பட்டு, தேசூா் ஆகிய பேரூராட்சிகளிலும், அனைத்து ஊராட்சிகளிலும் தடையின்றி குடிநீா் விநியோகம் செய்வது தொடா்பாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Advertisement

கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் பேசியதாவது:

தடையின்றி குடிநீா் விநியோகம் செய்யவேண்டும்,

தேவைப்படும் இடங்களில் லாரிகள் மூலம் குடிநீா் விநியோகம் செய்யவேண்டும்.

குடிநீா் விநியோகம் செய்யும் இணைப்புகள் மற்றும் மோட்டாா் இயந்திரங்களில் பழுது ஏற்பட்டால் உடனடியாக சரி செய்ய வேண்டும்.

பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தொடா்ந்து குடிநீரை சுகாதாரமான முறையில் விநியோகம் செய்ய வேண்டும் என்று துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து கோடை விடுமுறை முடிந்து மாணவா்களின் வசதிக்காக பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகள் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து ஆட்சியல் ஆய்வு செய்தாா்.

கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ், நகராட்சி, ஊரக வளா்ச்சித் துறையினா், பேரூராட்சி செயல் அலுவலா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.