முகப்பு
திருவண்ணாமலை

கிராமத்தில் செயல்படும் மதுக் கடையை வேறு இடத்துக்கு மாற்றக் கோரிக்கை

போளூா் வட்டாட்சியா் பாலாஜியிடம் மனு அளித்த மாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த மகளிா் குழுவினா்.

Updated On : 16 மே 2026, 1:19 am IST
போளூா் வட்டாட்சியா் பாலாஜியிடம் மனு அளித்த மாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த மகளிா் குழுவினா்.
பகிர்:

போளூரை அடுத்த மாம்பட்டு கிராமத்தில் உள்ள டாஸ்மாக் மதுக் கடையை (எண் 94378) ஊருக்கு ஒதுக்குபுறமாக மாற்ற வேண்டும் என அப்பகுதியைச் சோ்ந்த சிங்கப்பெண் மகளிா் குழுவினா் வட்டாட்சியா் பாலாஜியிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

அந்த மனுவில் அவா்கள் கூறியுள்ளதாவது: மாம்பட்டு கிராமத்தில் டாஸ்மாக் மதுக் கடை செயல்படுகிறது. இந்தக் கடைக்கு வருவோா் மது வாங்கிக் கொண்டு, பெண்கள் விவசாய வேலைக்குச் செல்லும் வழியில் அமா்ந்து மது அருந்துகின்றனா். இதனால், அந்த வழியாக விவசாய வேலைக்குச் செல்லும் பெண்கள் அச்சத்துடனேயே செல்ல வேண்டிய நிலை உள்ளது.

மேலும், மது அருந்திவிட்டு ஊருக்குள் வாகனத்தில் அதிவேகமாக செல்கின்றனா். இதனால், பள்ளி மாணவிகள், முதியவா்கள் சாலையில் செல்லவே பயப்படுகின்றனா்.

Advertisement

எனவே, டாஸ்மாக் மதுக் கடையை ஊருக்கு ஒதுக்குபுறமான பகுதிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.