முகப்பு
வேலூர்

சாலைப் பணி நிறுத்தம்: பொதுமக்கள் அவதி

அரக்கோணம் அருகே சாலை போடும் பணிக்காக கற்களை பரப்பிவிட்டு பணி நிறுத்தப்பட்டதால்

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:36 PM
பகிர்:

அரக்கோணம் அருகே சாலை போடும் பணிக்காக கற்களை பரப்பிவிட்டு பணி நிறுத்தப்பட்டதால் கடந்த 15 நாள்களாக பொதுமக்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

அரக்கோணத்தை அடுத்த கீழ்க்குப்பம் ஊராட்சிக்குள்பட்டவை ஜெயம் நகர், மேத்யூஸ் நகர். இப்பகுதியில் கடந்த 15 நாள்களுக்கு முன் சாலைப் பணிக்காக கற்களை நிரப்பினர். பின்னர் பணியை பாதியில் நிறுத்திவிட்டு சென்றுவிட்டனர். இதனால் இப்பகுதியில் உள்ள 6 சாலைகளில் யாரும் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நடந்து செல்லவோ, வாகனங்களில் செல்லவோ முடிவதில்லை.

இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவர் எம்.கன்னையனிடம் கேட்டபோது, ஒப்பந்ததாரர் கற்களை பரப்பி மேலே கிராவல் ஓட்ட வேண்டிய நிலையில் வட்டாட்சியர் அலுவலகத்தினர் ஏரியில் கிராவல் எடுக்கக் கூடாது என தடுத்துவிட்டனர்.

மீறிச் சென்றால் வாகனங்களை பறிமுதல் செய்து விடுகின்றனர். அதனால்தான் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் விபத்துகள் ஏற்படுகின்றன என்றார்.

இதுகுறித்து வட்டாட்சியர் தமீன் கூறியது:

ஏரி மற்றும் ஆற்றில் உரிமம் இல்லாமல் மண், மணல் எடுப்பது சட்டவிரோதமான செயல். அரசுப் பணி என்றாலும் அதற்காக அவர் கனிமவளத் துறையில் இருந்து உரிமம் பெற்று வர வேண்டும் என்றார்.

எனவே இப்பிரச்னைக்கு தீர்வுகான அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.