முகப்பு
வேலூர்

இரட்டையர் இறகுப் பந்து போட்டிகள் தொடக்கம்

குடியாத்தம் தி பிரண்ட்ஸ் கிளப் சார்பில், கே.எம்.ஜி. கல்லூரி விளையாட்டரங்கில் 2 நாள்கள் நடைபெறும் இரட்டையர் இறகுப் பந்து போட்டிகள் சனிக்கிழமை தொடங்கின.

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:55 AM
பகிர்:

குடியாத்தம் தி பிரண்ட்ஸ் கிளப் சார்பில், கே.எம்.ஜி. கல்லூரி விளையாட்டரங்கில் 2 நாள்கள் நடைபெறும் இரட்டையர் இறகுப் பந்து போட்டிகள் சனிக்கிழமை தொடங்கின.

கிளப் தலைவர் கே. மோகன்ராஜ் தலைமையில், இப்போட்டியை கல்லூரிச் செயலர் கே.எம்.ஜி. ராஜேந்திரன் துவக்கி வைத்தார்

பின்னர் கொண்டசமுத்திரம் ஊராட்சித் தலைவர் வி. ராமு காலிறுதி போட்டியையும், அரசு வழக்குரைஞர் கே.எம். பூபதி அரையிறுதிப் போட்டியையும் துவக்கி வைத்தனர்.

இப்போட்டிகளில் 30-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றுள்ளன.

கிளப் கௌரவத் தலைவர் டி. செல்வம், பொதுச் செயலர் பி.எச். இமகிரிபாபு (எ) இமயவரம்பன், துணைத் தலைவர் ரா.சி. தலித்குமார், பொருளாளர் பி. கல்யாண், அமைப்பாளர் ஏ. விவேகானந்தன் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →