வேலூர்

தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவிப்பு

ஆற்காட்டில் அதிமுக புதிய நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டவர்கள் ஊர்வலமாகச் சென்று தலைவர்களின் சிலைகளுக்கு புதன்கிழமை மாலை அணிவித்தனர்.

தினமணி

ஆற்காட்டில் அதிமுக புதிய நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டவர்கள் ஊர்வலமாகச் சென்று தலைவர்களின் சிலைகளுக்கு புதன்கிழமை மாலை அணிவித்தனர்.

ஆற்காடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உளபட்ட ஆற்காடு நகரம், ஒன்றியம், திமிரி, கணியம்பாடி ஒன்றியங்கள், திமிரி, கலவை, விளாபாக்கம் பேரூராட்சிகளின் அதிமுக புதிய நிர்வாகிகளை அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, வேலூர் கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலர் ஆற்காடு வி.கே.ஆர்.சீனிவாசன் எம்எல்ஏ தலைமையில், கட்சியின் புதிய நிர்வாகிகள் ஆற்காடு வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை அணிவித்து, ஊர்வலமாக கலவை சாலை, அண்ணா சாலை, புதிய வேலூர் சாலை வழியாக வந்து அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில், ஆற்காடு நகர அவைத் தலைவர் ஆர்.புருசோத்தமன், செயலர் எம்.சங்கர், ஆற்காடு ஒன்றியச் செயலர் தாஜ்புரா எம்.குட்டி, திமிரி ஒன்றியச் செயலாளர் என்.ஜனார்த்தனன், கணியம்பாடி ஒன்றியச் செயலர்

எம்.ராகவன், மாவட்ட அவைத் தலைவர் ஆர்.ஜி.கே.நந்தகோபால், மாவட்டத் துணைச் செயலர்

ஜெ.ரமாபிரபா, பேரூராட்சிச் செயலர்கள் கேசவன் (திமிரி), எம்.கமலஹாசன் (விளாபாக்கம்),

கே,.ஆர்.சதீஷ் (கலவை), ஆற்காடு தொகுதி இணைச் செயலாளர் ராமசேகர், மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் எஸ்.அன்பழகன், ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் எஸ்.சிகாமணி, திமிரி ஒன்றியக் குழுத் தலைவர் வி.மூர்த்தி, கலவை பேரூராட்சித் தலைவர் ஜெயக்குமார், மாவட்ட விவசாயப் பிரிவுத் தலைவர் ஏ.எஸ்.மணி, அரசு வழக்குரைஞர் மு.தமிழ்செல்வன், அதிமுக புதிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சோளிங்கர்நகர, ஒன்றியத்தில்...

சோளிங்கர் நகர, ஒன்றிய அதிமுக புதிய நிர்வாகிகளை நியமித்து, அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

சோளிங்கர் நகரச் செயலராக என்.சீனிவாசன், அவைத் தலைவராக வி.பி.நாகராஜன், துணைச் செயலராக கே.வேலு, இணைச் செயலராக சாவித்திரி நரசிம்மன், கலைவாணி சரவணன், பொருளாளராக என்.எம்.பிச்சாண்டி, மாவட்டப் பிரதிநிதிகளாக

கே.நாகராஜன், எம்.குப்பன், அம்சாமணி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சோளிங்கர் கிழக்கு ஒன்றியச் செயலராக வி.குப்பன், அவைத் தலைவராக எ.மூர்த்தி, இணைச் செயலராக எம்.குணசுந்தரி, துணைச் செயலராக பி.தேவிகா, வி.வெங்கடேசன், பொருளாளராக வில்பர்ட் ஜெயக்குமார், மாவட்டப் பிரதிநிதிகளாக ஆர்.பாப்பு, ஆர்.ஜெயவேலு, எஸ்.சேகர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, புதிய நிர்வாகிகள் சோளிங்கர் பேருந்து நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு தொகுதிச் செயலாளர் சி.கோபால் தலைமையில் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில், சோளிங்கர் நகரக் கூட்டுறவு வங்கித் தலைவரும், மாவட்ட முன்னாள் செயலருமான என்.ஜி.பார்த்தீபன், சோளிங்கர் ஒன்றியக் குழுத் தலைவர் கோகுலகிருஷ்ணன், காவேரிப்பாக்கம் ஒன்றியச் செயலர் டி.ராஜா, சிட்டிபாபு, வெங்குபட்டு சம்பத், வழக்குரைஞர்கள் தமிழ்ச்செல்வன், பாஸ்கரன், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் கிழக்கு மாவட்டத்தில்...

வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலராக குடியாத்தத்தைச் சேர்ந்த வி.ராமு நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா புதன்கிழமை பிறப்பித்தார்.

பி.இ. பட்டதாரியான ராமு, 2006 முதல் வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக விவசாயப் பிரிவுச் செயலராக இருந்து வருகிறார்.

குடியாத்தம் ஒன்றியத்துக்கு உள்பட்ட கொண்டசமுத்திரம் ஊராட்சி மன்றத் தலைவராக 3-ஆவது முறையாகப் பதவி வகித்து வருகிறார். 19,000 வாக்காளர்களைக் கொண்ட கொண்டசமுத்திரம், வேலூர் மாவட்டத்தின் 2-ஆவது பெரிய ஊராட்சியாகும்.

ஆலங்காயம் பேரூராட்சி நிர்வாகிகள்...

ஆலங்காயம் பேரூராட்சி அதிமுக புதிய நிர்வாகிகளை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா நியமித்து அறிவித்துள்ளார்.

அதன்படி, ஆலங்காயம் பேரூராட்சிச் செயலராக து.பாண்டியன் 4-ஆவது முறையாக நியமிக்கப்பட்டுள்ளார். அவைத் தலைவராக சி.முனுசாமி, இணைச் செயலராக கே.செண்பகம் குப்புசாமி, துணைச் செயலர்களாக பாரதி அரிமூர்த்தி, ஆர்.பன்னீர், பொருளாளராக எம்.முருகன், மாவட்டப் பிரதிநிதிகளாக குமாரி பழனி, என்.எஸ்.தபரேஸ், எம்.பழனி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, புதிய நிர்வாகிகள் வாணியம்பாடி எம்எல்ஏ கோவி.சம்பத்குமார் தலைமையில் ஆலங்காயம் பேருந்து நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, காந்தி, அண்ணா, அம்பேத்கர் சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். நிகழ்ச்சியில், ஒன்றியக் குழுத் தலைவர் எம்.கோபால், துணைத் தலைவர் அண்ணாசாமி, பேரூராட்சித் தலைவர் மஞ்சுளா கந்தன், கட்சி நிர்வாகிகள் திராளானோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Hyderabad-ல் கொட்டித்தீர்த்த மழை! தண்ணீரில் மிதந்து சென்ற வாகனங்கள்! | Flood

Anirudh-துடன் ‘Padel’ விளையாடிய captain MS Dhoni! | Chennai

மாநிலக் கல்விக் கொள்கையை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்!

வாக்காளா் பட்டியல் முறைகேடு: பெங்களூருவில் ராகுல் காந்தி தலைமையில் இன்று ஆா்ப்பாட்டம்

வரிவிதிப்பு சர்ச்சை: இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தையை நிராகரித்த டிரம்ப்!

SCROLL FOR NEXT