வேலூர்

வேலைவாய்ப்பு முகாமில் 566 பேருக்கு பணி ஆணை

DIN

குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் நடத்திய இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாமில் 566 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன.
முகாமில் 3,592 இளைஞர்கள் கலந்து கொண்டனர். 39 நிறுவனங்கள் மூலம் 566 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தலைமை வகித்தார். மகளிர் திட்ட மாவட்ட அலுவலர் சிவராமன் வரவேற்றார். வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி முகாமில் தேர்வானவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கினார்.
மாவட்ட தொழில் மையம், புதுவாழ்வுத் திட்டம் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவிகளும், படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு மானிய தொகையும், ஆட்டோ ஓட்ட பயிற்சி பெற்ற 3 பெண்களுக்கு ரூ. 9 லட்சம் கடனில் ஆட்டோக்களும் வழங்கப்பட்டன.
எம்எல்ஏக்கள் என்.ஜி.பார்த்திபன், ஜெயந்தி பத்மநாபன், ஆர்.பாலசுப்பிரமணி, ஜி.லோகநாதன், மாவட்ட புதுவாழ்வுத் திட்ட மேலாளர் எஸ்.ஏ.சம்பத்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்த், ரகு, வட்டாட்சியர் இ.நாகம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

SCROLL FOR NEXT