கரும்பு டன்னுக்கு ரூ. 4 ஆயிரம் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்கக் கோரி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகம் எதிரே வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்கக் கோரி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகம் எதிரே வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சி.கே. தனபால் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் எஸ்.ஏ. சின்னசாமி ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார். மாநிலத் துணைத் தலைவர் கே. கண்ணையா நாயுடு, மாநில கொள்கை பரப்புச் செயலாளர் கே.கே. கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்துக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் மாநிலத் தலைவர் எஸ்.ஏ.சின்னசாமி கூறியதாவது:
கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக ஒரே தவணையில் வழங்க வேண்டும். கரும்பு வெட்டுக் கூலியை அரசே ஏற்க வேண்டும். விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.