முகப்பு
வேலூர்

ஜோலார்பேட்டை ஒன்றிய வார்டுகளுக்கான மறுவரையறை வரைவு பட்டியல் வெளியீடு

ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் வார்டுகளுக்கான மறுவரையறை வரைவு பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. 

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:27 PM
பகிர்:

ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் வார்டுகளுக்கான மறுவரையறை வரைவு பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. 
ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் 36 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சியின் பல்வேறு கிராமங்களில் உள்ள வார்டுகளிலிருந்து, மக்கள் தொகை அடிப்படையில் வாக்காளர்களை சமன்படுத்துவதற்கான பணி மேற்கொள்ளப்பட்டது. 
அந்த வகையில், ஊராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கான மறு வரையறை வரைவுக்கான பட்டியல் வெளியீடு ஏலகிரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. 
இந்த பட்டியலானது அனைத்து ஊராட்சி அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. 
இது தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், ஜனவரி 2-ஆம் தேதி வரை ஊராட்சி அலுவலகங்கள் மற்றும் ஒன்றிய அலுவலகங்களில் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 இந்த ஊராட்சி ஒன்றிய வார்டு மற்றும் ஊராட்சி வார்டு மறுவரையறை பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பிரேம் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளவரசன், அன்பரசன், முன்னாள் ஊராட்சித் தலைவர் அச்சுதன், கோவிந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

முழு கட்டுரையைப் படிக்க →