வேலூர்

குடியிருப்புப் பகுதியில் விளையாட்டுத் திடல் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

DIN

குடியாத்தம் அருகே தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதியில் விளையாட்டுத் திடல் அமைக்க வேண்டாம் என அப்பகுதி மக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் ரகுவிடம் அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை அளித்த கோரிக்கை மனு விவரம்:
குடியாத்தம் ஒன்றியம், கொண்டசமுத்திரம் ஊராட்சி, ராஜா கோயில் கிராமத்தில் 140 வீடுகள் கொண்ட வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது.
இந்த வளாகத்தில் விளையாட்டுத் திடல் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.  விளையாட்டுத் திடலுக்கு தேர்வு செய்யப்பட்ட இடம் வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்குச் சொந்தமானது. அந்த இடத்தைத் தவிர்த்து, ஊராட்சிக்குச் சொந்தமான ஏதாவது ஒரு இடத்தில் விளையாட்டுத் திடல் அமைக்க வேண்டுகிறோம்.
மேலும், வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் குடிநீர் வசதி, தொடக்கப் பள்ளி வசதி, அங்கன்வாடி வசதி, காரிய மேடை ஆகியன அமைத்துத் தர வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திரத்தில் பிரசார வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீவைப்பு

பரதா படத்தின் கான்செப்ட் விடியோ

சென்னையில் நாளை ஐபிஎல் போட்டி: சிறப்பு ரயில்கள் இயக்கம்!

இனிமேல் விவாவத விடியோ!

ஸ்டார் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT