வேலூர்

போக்குவரத்து விதிகளை மீறிய 49 பேர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை

DIN

வேலூர் மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 49 பேரின் ஓட்டுநர் உரிமத்தை தாற்காலிகமாக ரத்து செய்ய வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் காவல்துறையினர் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அவ்வப்போது வாகனத் தணிக்கை செய்து அதிக பாரம் ஏற்றிச் சென்றது, தலைக்கவசம் அணியாதது, மதுபோதையில் வாகனம் ஓட்டிச் செல்வோரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், விபத்துக்கு வழிவகுக்கும் வகையில் செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டியது, மதுபோதையில் சென்றது, இரு சக்கர வாகனங்களில் மூவர் சென்றது என 49 பேரின் ஓட்டுநர் உரிமத்தை தாற்காலிகமாக ரத்து செய்ய காவல்துறை சார்பில் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT