வேலூர்

வேலூர் முத்துரங்கம் அரசுக் கல்லூரி தேர்வு முடிவுகள் வெளியீடு

DIN

வேலூர் முத்துரங்கம் அரசினர் கலைக் கல்லூரி தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் ரா.சுகிர்தராணி ஜீலினா,  தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஜி.எழிலன் ஆகியோர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இளங்கலையில் 2,652 பேர்,    முதுகலையில் 361 பேர் என மொத்தம் 3,013 மாணவர்கள் எழுதிய பருவத் தேர்வு முடிவுகள்  www.mgacvlr.org  என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  மாணவர்கள் பதிவு எண், பிறந்த தேதியை உள்செலுத்தி தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மறுமதிப்பீடு செய்ய விரும்பும் மாணவர்கள்  ஜூன் 30ஆம் தேதிக்குள்  விண்ணப்பிக்கலாம்.  அதேபோல, இறுதியாண்டு மாணவர்கள் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறவில்லையெனில் வருகிற ஜூலை 5ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து, ஜூலை 12ஆம் தேதி தேர்வு எழுதலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT