வேலூர்

உதயேந்திரம் தூயநெஞ்ச ஆண்டவர் ஆலய பெருவிழா

DIN

வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் தூயநெஞ்ச ஆண்டவர் ஆலயத்தின் 71-ஆவது ஆண்டு பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த ஆலயத்தில் கடந்த 16-ஆம் தேதி கொடியேற்றுத்துடன் விழா தொடங்கியது. இதையொட்டி, தினமும் மாலை நற்செய்தி நவநாள் வழிபாடுகள் நடைபெற்றன.
இதைத் தொடர்ந்து, நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை அருட்பணி.இருதயராஜ் தலைமையில் நற்கருணை பெருவிழா, திருப்பலிலி மற்றும் நற்கருணை பவனி நடைபெற்றது. திங்கள்கிழமை காலை பேரருட்திரு .ஸ்டீபன் தலைமையில் மறைகோட்ட பங்கு தந்தையர்கள் பங்கேற்ற பாடற்கூட்டு திருப்பலிலி நடைபெற்றது.
இதில், உதயேந்திரம் பங்கைச் சேர்ந்த 72 சிறுவர்களுக்கு புதுநன்மை எனப்படும் திருவருட்சாதனம் வழங்கப்பட்டது.
மாலையில் அலங்கரிக்கப்பட்ட தூயநெஞ்ச ஆண்டவரின் தேர்பவனி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று ஆலயத்தை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவுக்கான எற்பாடுகளை பங்கு தந்தை ஏ.ராயப்பன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

SCROLL FOR NEXT