வேலூர்

இரண்டாம் நிலை காவலர் எழுத்துத் தேர்வு: 38,762 பேர் எழுதுகின்றனர்

DIN

வேலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நிலைக் காவலர் எழுத்துத் தேர்வை 38,762 பேர் எழுதுகின்றனர்.
இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பொ.பகலவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாநிலம் முழுவதிலும் இரண்டாம் நிலைக் காவலர், சிறைக் காவலர், தீயணைப்புத் துறைகளில் காலியாக உள்ள 15,711 காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. வேலூர் மாவட்டத்தில் 21 மையங்களில் நடைபெறும் இந்தத் தேர்வை 38,762 பேர் எழுதுகின்றனர்.
தேர்வெழுதுவோர் அனுமதிச் சீட்டு, அடையாள அட்டையுடன் நீல நிறம் அல்லது கருப்பு நிற பால் பாயிண்ட் பேனா
மட்டுமே கொண்டு வர வேண்டும். பை, செல்லிடப்பேசி, கால்குலேட்டர், எலக்ட்ரானிக் பொருள்களை எடுத்து வரக் கூடாது.
அனுமதிக் கடிதத்தில் புகைப்படம் இல்லாதவர்கள் புகைப்படத்துடன் வந்தால் மட்டுமே தேர்வெழுத அனுமதிக்கப்படுவர். தேர்வு மையத்தினுள் காலை 9 மணிக்கு இருக்க வேண்டும். காலை 10.15 மணிக்கு மேல் தேர்வெழுத வருவோர் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லாலு பிரசாத் மகளுக்கு எதிராக லாலு பிரசாத் போட்டி?

நெல்சன் தயாரிப்பில் முதல் படம் யாருடன்?

பிரதமருக்கு இன்னும் மணிப்பூர் செல்ல நேரமில்லை: ப.சிதம்பரம்

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

நிழலும் நிஜமும்...!

SCROLL FOR NEXT