வேலூர்

புத்துமாரியம்மன் கோயில் திருவிழா

DIN

வாணியம்பாடியை அடுத்த புத்துக்கோவிலில் உள்ள ஸ்ரீபுத்து மாரியம்மன் கோயிலில் 59-ஆம் ஆண்டு வைகாசி மாத திருவிழா அண்மையில் நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு அதிகாலை 4 மணி முதல் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு கரக ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று அம்மன் சந்நிதியை அடைந்தது. காலை முதல் மாலை வரை 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அம்மனுக்கு பொங்கலிட்டும், மா விளக்கு ஏற்றி பூஜைகள் செய்தும் வழிபட்டனர்.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து பம்பை, சிலம்பாட்டம், ஒத்தையடி மேளம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாலை 6 மணிக்கு வாண வேடிக்கையுடன் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

SCROLL FOR NEXT