முகப்பு
வேலூர்

கல்லறை திருநாள் அனுசரிப்பு

வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் தூயநெஞ்ச ஆண்டவர் ஆலயத்தின் கல்லறைத் தோட்டத்தில் கல்லறை திருநாளையொட்டி, கிறிஸ்தவர்கள் வியாழக்கிழமை சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

வேலூர்

கல்லறை திருநாள் அனுசரிப்பு

வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் தூயநெஞ்ச ஆண்டவர் ஆலயத்தின் கல்லறைத் தோட்டத்தில் கல்லறை திருநாளையொட்டி, கிறிஸ்தவர்கள் வியாழக்கிழமை சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் தூயநெஞ்ச ஆண்டவர் ஆலயத்தின் கல்லறைத் தோட்டத்தில் கல்லறை திருநாளையொட்டி, கிறிஸ்தவர்கள் வியாழக்கிழமை சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
கல்லறைத் தோட்டத்தில் உள்ள தங்களது உறவினர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து, புதிய வண்ணங்கள் பூசினர்.
 மாலையில் பங்குதந்தை ராயப்பன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அப்போது, இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டிக் கொண்டு, கல்லறைகளில் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர்.
இதேபோல, வாணியம்பாடி கோணாமேடு பகுதியில் சகாய மாதா ஆலய கல்லறைத் தோட்டத்தில் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது.
அரக்கோணத்தில்...
அரக்கோணம், நவ. 2: அரக்கோணத்தில் கிறிஸ்தவர்களின் கல்லறை திருநாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
அரக்கோணம் நகரில் சிஎஸ்ஐ தூய அந்திரேயர் ஆலய கல்லறைத் தோட்டத்தில் ஆயர் சாமுவேல் புனிதராஜ் சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். இதில், ஆயர்கள் பென்ஷியாரூத், பூங்கொடி, கருணாகரன் ஆகியோர் பங்கேற்று ஒவ்வொரு கல்லறையிலும் பிரார்த்தனை செய்தனர்.
இதில், சிஎஸ்ஐ தூய அந்திரேயர் ஆலய செயலாளர் அன்புகுமார், பொருளாளர் புகழும் பொன்னையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →