மலைவாழ் மக்கள் தொடர் போராட்டம்
திருப்பத்தூர் அருகே சாலை வசதி கேட்டு கடந்த 30-ஆம் தேதி முதல் மலைவாழ் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் அருகே சாலை வசதி கேட்டு கடந்த 30-ஆம் தேதி முதல் மலைவாழ் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் அருகே ஜவ்வாது மலைப் பகுதியில் புதிதாக சாலை அமைத்துத் தரக் கோரி கடந்த 30-ஆம் தேதி முதல் அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 16 கிராமங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை பள்ளிகளுக்கு அனுப்பாமலும், குடியுரிமைகளை சாலையில் வீசியும் போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள், புதன்கிழமை முதல் தங்களது வீடுகளில் முன் கருப்புக் கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.