வேலூர்

நகராட்சிப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

DIN

ஆம்பூர் பன்னீர்செல்வம் நகர் நகராட்சிப் பள்ளியில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் அறிவியல் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
மாதனூர் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாதேஷ் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். முதுநிலை அறிவியல் பட்டதாரி ஆசிரியை லீலாவதி மற்றும் அறிவியல் பட்டதாரி ஆசிரியை பாக்கியஷீலா ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். மாதனூர் ஒன்றிய, ஆம்பூர் நகரப் பள்ளிகள் அளவில் கணினிப் போட்டியில் முதலிடம் பெற்ற பன்னீர்செல்வம் நகர் நகராட்சிப் பள்ளி மாணவர் சாருகேஷுக்கு ரூபாய் ஆயிரத்துக்கான காசோலையை வட்டார வளமைய மேற்பார்வையாளர் தமிழ்செல்வன் வழங்கினார்.
கண்காட்சியில் உயர் வகுப்பு நிலையில் முதல் பரிசும் துவக்க நிலையில் சிறந்த கூட்டு முயற்சிக்கான கேடயமும் பன்னீர்செல்வம் நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு வழங்கப்பட்டது. கண்காட்சியில் தூய்மை இந்தியா, டெங்கு ஒழிப்பு மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட
பல்வேறு படைப்புகள் வைக்கப்பட்டிருந்தன.
இதில், மாணவர்களின் தனித்திறனை வெளிப்படுத்தும் கராத்தே, சிலம்பம், கரகாட்டம், பாட்டு போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 10 பள்ளிகளின் மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், ஆசிரியர்கள் சத்தியசீலி, சசிகலா, தேவிபாலா, ஆஷா, சுகன்யா, சரண்யா, சுபேதா, ஷகில மற்றும் ஆசிரியர் பயிற்றுநர் லக்ஷ்மிதேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

லக்னௌ டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

ரோஸ் நிறக் காரிகை!

பாஜகவின் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்: காங்கிரஸ் அடுக்கடுக்கான புகார்!

SCROLL FOR NEXT