முகப்பு
வேலூர்

இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்: 25 பேர் கைது

திருப்பத்தூரில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினர் 25 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர். 

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

திருப்பத்தூரில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினர் 25 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர். 
திருப்பத்தூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப் பணிக்காகத் தோண்டப்பட்டு குண்டும், குழியுமாக உள்ள சாலைகளைச் சீரமைக்கக் கோரியும், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் அளிக்க வேண்டிய சிகிச்சையை செவிலியர்கள் அளிப்பதைக் கண்டித்தும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருவோரை தருமபுரி மற்றும் வேலூர் அரசு மருதுத்துவமனைகளுக்கு அனுப்பி வைப்பதை கண்டித்தும் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், நகரச் செயலாளர் சஞ்சய்ராஜ் தலைமை வகித்தார். நகரத் தலைவர் சிவா, நிர்வாகி ராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
மாநிலத் துணைத் தலைவர் சோமுராஜசேகர், மாநிலச் செயலாளர் ரமேஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர். 
வேலூர் மேற்கு மாவட்டத் தலைவர் ரமேஷ் நன்றி கூறினார். 

முழு கட்டுரையைப் படிக்க →