முகப்பு
தற்போதைய செய்திகள்

உலகத்தலைவர்களை பிரதமர் அவமதிக்க ராகுல் விரும்புகிறார்: பாஜக எம்.பி.

ராகுல் காந்தி குறித்து பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கூறியது...

Updated On : 12 மார்ச், 2026 at 3:20 PM
நிஷிகாந்த் துபே - கோப்புப் படம்
பகிர்:

பிரதமர் மோடி உலகத்தலைவர்களை அவமதிக்க வேண்டும் என ராகுல் காந்தி விரும்புவதாக பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கூறியுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு நடைபெற்று வரும் நிலையில் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம் என்று பிரதமர் மோடி கூறிவிட்டு, அவரே பீதியில்தான் உள்ளார் என ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

Advertisement

இதுபற்றி கருத்து தெரிவித்த பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே, "பிரதமர் காலையில் டொனால்ட் டிரம்பையும், மதியம் விளாடிமிர் புடினையும், மாலையில் ஜி ஜின்பிங்கையும் அவமதிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி விரும்புவதாகத் தெரிகிறது.

மூவரையும் பிரதமர் அவமதித்தால், ராகுல் காந்தியின் ஆன்மா சாந்தியடையும். ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா இணைந்து இந்தியாவைப் புறக்கணிக்கும்போது அல்லது தாக்கும்போது ​​ராகுல் திருப்தி அடைவார். ஏனெனில், இந்தியாவை பலவீனப்படுத்தும் ஜார்ஜ் சோரோஸின் திட்டம் வெற்றி பெற்றிருக்கும்" எனத் தெரிவித்தார்.

summary

BJP MP Nishikant Dubey has said that Leader of Opposition in the Lok Sabha Rahul Gandhi wants Prime Minister Modi to insult world leaders.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.