அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
ஒட்டுமொத்த நாட்டையும் தொழிலதிபர் கௌதம் அதானிக்கே பிரதமர் நரேந்திர மோடி விற்பதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றச்சாட்டு
ஒட்டுமொத்த நாட்டையும் தொழிலதிபர் கௌதம் அதானிக்கே பிரதமர் நரேந்திர மோடி விற்பதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்கு வங்கத்தின் ஹூக்லியில் காங்கிரஸின் தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி பேசியதாவது, "சில ஆண்டுகளுக்கு முன்பு, கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரையில் பாரத் ஜோடோ யாத்திரை என்ற பயணத்தை காங்கிரஸ் மேற்கொண்டது. அதில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
இந்தப் பயணத்தின்போதுதான் ஒன்று தெரிந்தது. அந்த நேரத்தில் பாஜக வெறுப்பின் கடையாகவும், காங்கிரஸ் அன்பின் சந்தையாகவும் இருப்பது அறியப்பட்டது.
Advertisement
Advertisement
மோடி ஏதேதோ சொல்கிறார். ஆனால், டிரம்ப்தான் அவரைக் கட்டுப்படுத்துகிறார்.
நரேந்திர மோடி, முழு நாட்டையும் அதானிக்கு விற்கிறார். விமான நிலையங்கள், துறைமுகங்கள், உள்கட்டமைப்பு, சூரிய சக்தி, காற்றாலை மின்சாரம், சிமென்ட் என அனைத்தும் அதானியிடம் ஒப்படைக்கப்படுகின்றன.
அதானி நிறுவனம் என்பது உண்மையான பெயர் அல்ல. அதனை அப்படி அழைக்கக் கூடாது. அதன் உண்மையான பெயர் மோதானி என்றே இருக்க வேண்டும். ஏனெனில், செய்யப்படும் அனைத்தும் சில பில்லியனர்களின் நலனுக்காகச் செய்யப்படுபவைதான்" என்று தெரிவித்தார்.
Congress MP Rahul Gandhi alleges that PM Modi is selling the entire country to Adani
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.