ராணிப்பேட்டை ஜி.கே. உலகப் பள்ளியின் 7- ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டிகள் ஸ்பார்ட்டா 2017 -18 என்ற பெயரில் பள்ளி வளாக விளையாட்டுத் திடலில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 24) தொடங்கியது.
தொடக்க விழாவுக்கு பள்ளி இயக்குநர்கள் வினோத் காந்தி, சந்தோஷ் காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், தமிழ்நாடு பிரீமியர் லீக் மட்டைப் பந்து வீரர் அலெக்சாண்டர் கலந்துகொண்டு, ஆண்டு விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து நடைபெற்ற தட களப் போட்டிகளில் பள்ளி விளையாட்டுக் குழுக்களை ஏர், வாட்டர், எர்த், பயர் என நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு விளையாடினர். இந்த போட்டிகளில் ஏர் ஹவுஸ் குழுவினர் முதலிடம் பெற்று 2017 - 18 -ஆம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை வென்றனர்.
பின்னர் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கான பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி இயக்குநர்கள் வினோத் காந்தி, சந்தோஷ் காந்தி ஆகியோர் தலைமை வகித்தனர். பள்ளியின் முதல்வர் பிரஸிதா ஸ்ரீகுமார் வரவேற்றார்.
விழாவில் தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் கிரேஸ் ஹெலினா கலந்துகொண்டு, பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுக் கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளியின் மக்கள் தொடர்பு அலுவலர் நேரு மற்றும் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர். இதில் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.