முகப்பு
வேலூர்

உலகிற்கே முன்னோடியாக திகழ்ந்தவர் அப்துல் கலாம்: நடிகர் மயில்சாமி

உலகிற்கே முன்னோடியாக திகழ்ந்தவர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் என நடிகர் மயில்சாமி கூறினார்.

வேலூர்

உலகிற்கே முன்னோடியாக திகழ்ந்தவர் அப்துல் கலாம்: நடிகர் மயில்சாமி

உலகிற்கே முன்னோடியாக திகழ்ந்தவர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் என நடிகர் மயில்சாமி கூறினார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:55 PM
பகிர்:

உலகிற்கே முன்னோடியாக திகழ்ந்தவர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் என நடிகர் மயில்சாமி கூறினார்.
திருப்பத்தூரில் அப்துல் கலாம் கல்வி அறக்கட்டளை மற்றும் பசுமை அறக்கட்டளை சார்பில் ஜெயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கல் மற்றும் அப்துல் கலாம் சிலை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், நடிகர் மயில்சாமி கலந்து கொண்டு பேசியதாவது: உலகிற்கே முன்னோடியாக திகழ்ந்தவர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். அவர் இறந்தபோது 6 வயது சிறுவன் முதல் 60 வயது முதியவர் வரை கண்ணீர் விட்டு அழுதனர். அவரின் சேவைகள் அளவில்லாதது.
தமிழகத்தை சுற்றியுள்ள மாநிலங்களில் அந்தந்த அரசுகள் அணை கட்டி வருகின்றன. ஆனால், காமராஜர் காலத்துக்குப் பிறகு 50 ஆண்டுகளில் தமிழக அரசு எந்த அணையும் கட்டவில்லை.
தற்போது பெய்த கனமழையால் வேலூர் மாவட்டத்தில் வரலாறு காணாத அளவில் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அதைத் தடுக்க அரசு தவறிவிட்டது. இதனால் தண்ணீர் கடலில் கலந்து வீணாகிறது என்றார். தொடர்ந்து, அவர் புதுப்பேட்டையில் அப்துல் கலாம் உருவச்  சிலையை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், காமராஜர் நூற்றாண்டு அறக்கட்டளை நிறுவனத் தலைவர் கணேஷ்மல், தொழிலதிபர் தாமோதரன், பள்ளித் தலைமை ஆசிரியர் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். துணைத் தலைமை ஆசிரியர் சிவகுமார் நன்றி கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →