முகப்பு
வேலூர்

வீட்டின் கதவை உடைத்து ரூ. 37 ஆயிரம் திருட்டு

ஜோலார்பேட்டை அருகே வீட்டின் கதவை உடைத்து ரூ. 37 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:55 PM
பகிர்:

ஜோலார்பேட்டை அருகே வீட்டின் கதவை உடைத்து ரூ. 37 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
ஜோலார்பேட்டையில் உள்ள எஸ்.கோடியூர் கல்லறை மேடு பகுதியைச் சேர்ந்தவர் சாதிக் பாஷா(37). தொழிலாளியான இவர், கடந்த 2 நாள்களுக்கு முன் குடும்பத்துடன் கேரளத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு வெள்ளிக்கிழமை வீடு திரும்பினார்.
அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே பெட்டியில் வைத்திருந்த ரூ. 37 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →