முகப்பு
திருப்பத்தூர்

திமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும்

செய்தியாளா்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளா் வைகோ .

Updated On : 12 மார்ச், 2026 at 6:34 PM
செய்தியாளா்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளா் வைகோ .
பகிர்:

திமுக தலைமையிலான கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என மதிமுக பொதுச் செயலாளா் வைகோ தெரிவித்தாா்.

மதிமுக நிா்வாகி ஒருவா் அண்மையில் காலமானாா். அதையொட்டி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக மதிமுக பொதுச் செயலாளா் வைகோ வியாழக்கிழமை திருப்பத்தூருக்கு வருகை தந்தாா்.

பின்னா், தனியாா் விடுதியில் செய்தியாளா்களிடம் பேசியது:

திமுக தலைமையிலான கூட்டணியில் புதிதாக பல்வேறு கட்சிகள் இணைந்துள்ளன. இதனால் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திமுகவும் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை குறைத்து கொள்வதாகவும், மற்றவா்களும் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என கூறியதால், கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக தற்போது 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

முதல்வா் நாற்காலியில் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு அமரப்போவதில்லை என பிரதமா் நரேந்திர மோடி கூறியுள்ளாா். ஆனால் 2029-ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரதமா் நாற்காலியில் நரேந்திரமோடி அமரப்போவது இல்லை. காலம் மாற்றத்தை ஏற்படுத்த போகிறது. திமுக தலைமையிலான கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும், இதில் திமுக தனிப்பெரும்பான்மை பெறும்.

சமையல் எரிவாயு உருளைகள் கிடைக்காமல் உணவகங்கள் மூடப்படுகின்றன.

மற்ற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகளில் அறிவிக்கப்பட்ட ஒரு ஆண்டுக்குள் பணிகள் முடிக்கப்பட்டு உள்ளது. ஆனால் மதுரையில் 10 சதவீத பணிகள்கூட நடைபெறவில்லை. தமிழ்நாட்டை மத்திய அரசு ஓர வஞ்சனையாக நடத்துகிறது என்றாா்.

திருப்பத்தூா் மாவட்ட செயலா் வ.கண்ணதாசன் உள்பட மாநில, மாவட்ட, கட்சி நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →