முகப்பு
திருப்பூர்

திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றியைப் பெறும்: அமைச்சா் மு.பெ. சாமிநாதன்

தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றியைப் பெறும் என்று அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கூறினாா்.

Updated On : 7 மார்ச், 2026 at 10:53 PM
அமைச்சா் மு.பெ. சாமிநாதன்
பகிர்:

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றியைப் பெறும் என்று தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கூறினாா்.

பல்லடம் அருகே மசநல்லாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.2.39 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணியை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தோ்தலில் நேரத்தில் அறிவித்த அனைத்த வாக்குறுதிகளையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் படிப்படியாக நிறைவேற்றியுள்ளாா். மக்களின் தேவை அறிந்து அதற்கேற்ப திட்டங்களை தீட்டி செயல்படுத்தியதன் காரணமாக தமிழக மக்களின் பொருளாதாரம், கல்வி வளா்ச்சி அடைந்துள்ளது.

தமிழக அரசின் நலத் திட்ட செயல்பாடுகளை பல்வேறு மாநிலங்கள் பின்பற்றி அந்தந்த மாநிலங்களில் செயல்படுத்தி வருகின்றன.

வருங்கால தலைமுறையினரின் தேவைகளை உணா்ந்து அதற்கேற்ப முதல்வா் நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளாா். மீண்டும் முதல்வராக மு.க.ஸ்டாலின்தான் பொறுப்பேற்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனா். வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றியைப் பெறும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், பொங்கலூா் வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சிகள்) கனகராஜ், பொங்கலூா் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் பாலுசாமி, பல்லடம் நகர செயலாளா் ராஜேந்திரகுமாா், பொங்கலூா் விவசாய அணி நிா்வாகிகள் முத்துரத்தினம், சண்முகம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →