கிறிஸ்தவ ஆலயம், சமுதாய கூடப் பணிக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி
வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் தூயநெஞ்ச ஆண்டவர் ஆலயம் மற்றும் சமுதாயக் கூடம் பணிகளுக்காக வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதி சார்பில்
வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் தூயநெஞ்ச ஆண்டவர் ஆலயம் மற்றும் சமுதாயக் கூடம் பணிகளுக்காக வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதி சார்பில் ரூ. 1 லட்சம் நிதியுதவியை மாநில தொழிலாளர் அமைச்சர் நீலோபர் கபில் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
உதயேந்திரம் தூயநெஞ்ச ஆண்டவர் கிறிஸ்தவ ஆலயம் அருகே உள்ள சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மறைமாவட்ட முதன்மை குரு ஐ.ஜான்ராபர்ட் தலைமை வகித்தார். பங்கு தந்தை ராயப்பன் வரவேற்றார். நகர அதிமுக செயலாளர் சதாசிவம், பேரூராட்சி செயலாளர் பிச்சாண்டி, மாவட்ட பிரதிநிதி பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், அமைச்சர் நீலோபர் கபில், தூயநெஞ்ச ஆண்டவர் ஆலயம் மற்றும் சமுதாயக் கூடம் அமைக்கும் பணிகளுக்காக வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதி சார்பில் ரூ. 1 லட்சம் நிதியுதவியை வழங்கினார். மேலும், உதேயந்திரம் புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் பயின்று கடந்த 2016-17-ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளி அளவில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகையை அமைச்சர் வழங்கினார்.