முகப்பு
வேலூர்

பணிநிறைவு பெறும் ஆசிரியருக்கு பாராட்டு

குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் பணிநிறைவு பெறும் ஆசிரியர் எம். சோமசுந்தரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. 

Updated On : 10 ஏப்ரல், 2018 at 4:44 AM
பகிர்:

குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் பணிநிறைவு பெறும் ஆசிரியர் எம். சோமசுந்தரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. 
நிகழ்ச்சிக்கு, கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.எம்.ஜி. சுந்தரவதனம் தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் ஜி. புருஷோத்தமன் வரவேற்றார். உதவித் தலைமை ஆசிரியர்கள் எஸ். நேதாஜி, எஸ்.கலைவாணி, புலவர் வே.பதுமனார், புலவர் தமிழ்திருமால் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். 
கல்வி நிறுவனங்களின் மேலாண்மை அறங்காவலர் கே.எம்.ஜி.பாலசுப்பிரமணியம், செயலர் கே.எம்.ஜி. ராஜேந்திரன் ஆகியோர் சோமசுந்தரத்துக்கு நினைவுப் பரிசு வழங்கினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.