வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
ஆம்பூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
ஆம்பூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
உமர்ஆபாத் அருகே மாச்சம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் எல்ஐசி முகவர் ஈஸ்வரன் (45). இவரும், இவரது மனைவியும் புதன்கிழமை வெளியே சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பியுள்ளனர்.
அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே பீரோவில் இருந்த 1 சவரன் தங்க நகை மற்றும் ரூ. 80 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
புகாரின் பேரில் உமர்ஆபாத் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.