வேலூர்

பள்ளிக்கு ரூ.10 லட்சம் செலவில் கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு

DIN

ஆற்காட்டில் உள்ள நகராட்சி (தெற்கு) பள்ளிக்கு ரூ. 10 லட்சம் செலவில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்புறைக் கட்டடம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. இக்கட்டடம் ஓய்வு பெற்ற ஆசிரியர் சி. ராதாகிருஷ்ணன் சார்பில் கட்டப்பட்டதாகும்.
அதேபோல் ஆற்காடு தோப்புகானா கெங்கையம்மன் கோயில் வளாகத்தில் ரூ. 7 லட்சம் செலவில் கட்டப்பட்ட இலவச மருத்துவமனைக்கான கட்டடத் திறப்பு விழாவும் நடைபெற்றது. இக்கட்டடமானது, ஆற்காடு குசல் ஜுவல்லர்ஸ் என்.கியாந்சந்த் சார்பில் கட்டப்பட்டதாகும்.
நிகழ்ச்சிக்கு, அண்ணாமலையார் அறக்கட்டளை அறங்காவலர் கு.சரவணன் தலைமை வகித்தார். மகாத்மா காந்தி அறக்கட்டளைத் தலைவர் ஜெ.லட்சுமணன், ஆற்காடு சட்டப் பேரவை உறுப்பினர் ஜெ.எல். ஈஸ்வரப்பன், அண்ணா சிலை சிறு வியாபாரிகள் சங்கத்தின்  பொருளாளர் பாஸ்கரன் மற்றும் நண்பர்கள் நலக்குழு நிர்வாகிகள் பங்கேற்றனர். ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் மருத்துவமனை கட்டடத்தை திறந்து வைத்தார். கலவை சச்சிதானந்த சுவாமிகள்  பள்ளியின் கூடுதல் வகுப்பறை கட்டடத்தை திறந்து வைத்தார்.  
விழாவில், இலவச மருத்துவமனைக்கு இ.சி.ஜி. கருவி, ஆய்வகக் கருவி உபகரணங்கள் வழங்கிய தன்னார்வலர்கள் கெளரவிக்கப்பட்டனர். இதில் நகரின் முக்கியப் பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

5 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT