வேலூர்

கைதிக்கு செல்லிடப்பேசி அளித்த சிறைக் காவலர் பணியிடைநீக்கம்

DIN


வேலூர் மத்திய சிறையில் கைதிக்கு செல்லிடப்பேசி வாங்கிக் கொடுத்ததாக 2-ஆம் நிலை சிறைக் காவலர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை வேலூர் சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதி பிறப்பித்துள்ளார்.
வேலூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் காட்வின்மோசஸ் (39). இவர், சாராய விற்பனை வழக்கில் செப்டம்பர் 19-ஆம் தேதி கைது செய்யப்பட்டு, வேலூர் மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டார். இவர் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், காட்வின்மோசஸ் தற்போது குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில், கைதிகள் அறையில் சிறைக் காவலர்கள் நடத்திய திடீர் சோதனையின்போது, காட்வின் மோசஸ் அறையில் இருந்து, செல்லிடப்பேசி கைப்பற்றப்பட்டது. அவரிடம் மேலும் நடத்தப்பட்ட விசாரணையில், 2-ஆம் நிலை சிறைக் காவலர் எஸ்.கணபதி அதை வாங்கிக் கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, கணபதியை பணியிடை நீக்கம் செய்து சிறைத் துறை டிஐஜி ஜெயபாரதி வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
இதுகுறித்து, சிறை அதிகாரிகள் கூறியது: கைதிகளுக்கு தடை செய்யப்பட்ட பொருள்களை சிறைக் காவலர்கள் வழங்குவதைத் தடுக்க சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு கண்காணித்ததில் சிறைக் காவலர் கணபதி, கைதி காட்வின்மோசஸ் ஆகியோர் அடிக்கடி சந்தித்துப் பேசியது தெரியவந்தது. இதையடுத்து, காட்வின்மோசஸின் அறையில் சோதனை செய்ததில், அவரிடம் இருந்து செல்லிடப்பேசி கைப்பற்றப்பட்டது.
விசாரணையில், காட்வின் மோசஸ் தனது வீட்டில் இருந்து புதிய செல்லிடப்பேசி வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். அதன் படி, கணபதியும் புதிய செல்லிடப்பேசியும், பணமும் வாங்கித் தந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சிறைக் காவல் கண்காணிப்பாளர் ஆண்டாள் பரிந்துரையின் பேரில், 2-ஆம் நிலை சிறைக் காவலர் கணபதியை பணியிடை நீக்கம் செய்து டிஐஜி ஜெயபாரதி உத்தரவிட்டுள்ளார். கணபதி கடந்த 2017-ஆம் ஆண்டு, ஜூலை மாதம் தான் 2-ஆம் நிலை சிறைக் காவலராக பணியில் சேர்ந்துள்ளார் என்றும் சிறைத் துறையினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT