வேலூர்

வேலூரில் செவிலியர்கள் போராட்டம்

DIN

வெள்ளக்கோயிலில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, அவர் தற்கொலைக்கு காரணமான மருத்துவரைக் கைது செய்யக் கோரி வேலூரில் அரசு மருத்துவமனை செவிலியர்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோயில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வந்தவர் மணிமாலா (23). இவர், கடந்த வாரம் பணிக்கு வரவில்லை என்பதற்காக அவருக்கு பணியிலிருந்து மருத்துவர் "மெமோ' கொடுத்ததாகக் கூறப்படுகிறது. 
இதையடுத்து மணிமாலா சனிக்கிழமை அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மணிமாலாவின் சாவுக்கு மருத்துவர் அளித்த மனஉளைச்சல்தான் காரணம் என்றும், சம்பந்தப்பட்ட மருத்துவரைக் கைது செய்ய வேண்டும் எனக் கோரியும் தமிழகம் முழுவதும் செலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் செவிலியர்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதேபோல வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் செவிலியர்கள் ஒரு மணி நேரம் பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 
அப்போது, செவிலியரின் தற்கொலைக்கு காரணமான மருத்துவரைக் கைது செய்ய வேண்டும், செவிலியர்களுக்கு பணி பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தைத் தொடர்ந்து செவிலியர்கள் பணிக்குத் திரும்பினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொன்மகள் வந்தாள்!

நூற்றாண்டு கண்ட ஆளுமைகள்

பேரரசின் சிதைவுகள்

தற்காலிக ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன்!

SCROLL FOR NEXT