ரயில் மோதியதில் மாணவர் சாவு
திருப்பத்தூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற மாணவர் ரயில் மோதியதில் உயிரிழந்தார்.
திருப்பத்தூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற மாணவர் ரயில் மோதியதில் உயிரிழந்தார்.
நாட்டறம்பள்ளியை அடுத்த எல்லப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாளின் மகன் விக்னேஷ்(17). இவர், திருப்பத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை சோமநாயக்கன்பட்டி அருகே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது, அவ்வழியாக வந்த ரயில் மோதியதில் விக்னேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார் நிகழ்விடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.