முகப்பு
வேலூர்

பாமக துணைப் பொதுச் செயலர் நியமனம்

பாமக துணைப் பொதுச்செயலராக அரக்கோணத்தை சேர்ந்த க.சரவணன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

Updated On : 9 ஜூலை, 2018 at 5:36 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

பாமக துணைப் பொதுச்செயலராக அரக்கோணத்தை சேர்ந்த க.சரவணன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாமகவின் துணை பொதுச்செயலர்கள் நாடாளுமன்றத் தொகுதி முழுவதையும் கவனித்துக்கொள்ள வேண்டும் என கட்சித்  தலைமை உத்தரவிட்டுள்ளது. இதன்படி அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு, காட்பாடி, திருத்தணி உள்ளடக்கிய அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்கான துணைப் பொதுச்செயலராக அரக்கோணத்தை அடுத்த காவனூர் ஊராட்சி முன்னாள் தலைவர் க.சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  ஏற்கெனவே கட்சியில் சமூகநீதி வழக்குரைஞர் பிரிவின் மாநிலச் செயலராக இருந்துவரும் க.சரவணன், கட்சியில் ஏற்கெனவே வேலூர் கிழக்கு மாவட்டச் செயலராக பதவி வகித்தவர். மேலும், காவனூர் ஊராட்சித் தலைவராக 5 வருடம் இருந்தவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.