வங்கியில் போலி நகை வைத்து ரூ. 27.92 லட்சம் மோசடி: 4 பேர் மீது வழக்குப் பதிவு
ஆம்பூரில் இயங்கி வரும் வங்கியில் போலி நகையை வைத்து மோசடியாக கடன் பெற்றது தொடர்பான புகாரின் பேரில் வங்கியின் நகை மதிப்பீட்டாளர்
வேலூர்வங்கியில் போலி நகை வைத்து ரூ. 27.92 லட்சம் மோசடி: 4 பேர் மீது வழக்குப் பதிவு
ஆம்பூரில் இயங்கி வரும் வங்கியில் போலி நகையை வைத்து மோசடியாக கடன் பெற்றது தொடர்பான புகாரின் பேரில் வங்கியின் நகை மதிப்பீட்டாளர்
ஆம்பூரில் இயங்கி வரும் வங்கியில் போலி நகையை வைத்து மோசடியாக கடன் பெற்றது தொடர்பான புகாரின் பேரில் வங்கியின் நகை மதிப்பீட்டாளர் உள்பட 4 பேர் மீது ஆம்பூர் நகர போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
ஆம்பூர் புறவழிச் சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கிளை இயங்கி வருகிறது.
இந்த வங்கியில் உயரதிகாரிகள் ஆய்வின் போது போலியாக நகை அடமானம் வைக்கப்பட்டு கடன் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து நடத்திய ஆய்வில் கடந்த 2014 முதல் 2016-ஆம் ஆண்டு வரை போலி நகைகள் அடமானம் வைக்கப்பட்டு, ரூ. 27.92 லட்சம் மோசடியாக கடன் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதற்கு வங்கியின் நகை மதிப்பீட்டாளராகப் பணிபுரியும் ஆம்பூரைச் சேர்ந்த சதீஷ் உடந்தையாக இருந்துள்ளது தெரியவந்தது.
வங்கி வாடிக்கையாளர்களான ஆம்பூர் அருகே பெரியாங்குப்பத்தைச் சேர்ந்த சக்திவேல் (42), அப்துல் மாலிக் (54) , அய்யனூரை சேர்ந்த சரவணன் (43) ஆகியோர் வங்கியில் போலி நகையை அடமானம் வைத்து நகைக் கடன் வாங்கியுள்ளனர்.
இதையடுத்து முறைகேட்டில் ஈடுபட்ட நகை மதிப்பீட்டாளர் மற்றும் வாடிக்கையாளர்கள் உள்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி வங்கியின் சென்னை மண்டல மேலாளர் மிஸ்ரா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வங்கியில் போலி நகையை அடமானம் வைத்து முறைகேடாக ரூ. 27.92 லட்சம் கடன் பெற்றவர்கள் மீதும், அதற்கு உடந்தையாக இருந்த நகை மதிப்பீட்டாளர் மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் ஆம்பூர் நகர போலீஸாருக்கு உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆம்பூர் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள சதீஷ், சக்திவேல், சரவணன், அப்துல் மாலிக் ஆகியோரைத் தேடி வருகின்றனர்.