முகப்பு
தற்போதைய செய்திகள்

அதிமுக கூட்டணியில் 3 தொகுதியை கேட்டுப் பெறுவோம்: பிவி. கதிரவன் நம்பிக்கை

பார்வர்ட் பிளாக் கட்சிக்கு 3 தொகுதிகளை அதிமுகவிடம் கேட்டுப் பெறுவோம் என்று பார்வர்ட் பிளாக் கட்சி கூறியது குறித்து...

Updated On : 5 மார்ச், 2026 at 8:34 AM
பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய துணைத் தலைவர் பிவி. கதிரவன்
பகிர்:

மதுரை: பார்வர்ட் பிளாக் கட்சிக்கு 3 தொகுதிகளை அதிமுகவிடம் கேட்டுப் பெறுவோம் என்று பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய துணைத் தலைவர் பிவி. கதிரவன் நம்பிக்கை தெரிவித்தார்.

அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில குழு கூட்டம் மதுரை காளவாசல் பகுதியில் தனியார் மண்டபத்தில் புதன்கிழமை இரவு நடந்தது.

இதில் மாநில பொதுச் செயலாளர், தேசிய துணைத்தலைவர் பிவி. கதிரவன் தீர்மானங்கள் குறித்து பேசினார்.

Advertisement

தமிழ் மாநில குழுவின் முடிவுக்கும், கட்சி வளர்ச்சிக்கும் எதிராக தன்னிச்சையாக மத்திய தலைமை செயற்குழு, மத்திய குழுவிடம் ஆலோசனை பெறாமல் பிவி. கதிரவன் மீது கூறிய குற்றச்சாட்டு மாநில குழுவுக்கு எதிரானது. அந்த புகார் கடிதத்தை திரும்ப பெற வேண்டும்.

2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சிங்கம் சின்னத்தில் போட்டியிடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் பிவி. கதிரவன் செய்தியாளர்களுடன் கூறுகையில், தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து உசிலம்பட்டி உள்பட 3 தொகுதிகளை கேட்டுப் பெற்று போட்டியிடுவோம். தமிழ் மாநில குழுவே அதிகாரம் கொண்டது. மாநிலக்குழு கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்கள் 26 மாவட்ட செயலாளர் கையெழுத்திட்டு தேசிய குழுவுக்கு அனுப்புவோம் என்றார்.

summary

We will ask for 3 seats in the AIADMK alliance says All India Forward Bloc PV. Kathiravan hopes

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.