கூடுதல் தொகுதிகளை கேட்டுப் பெறுவோம்: தொல். திருமாவளவன்
கூடுதல் தொகுதிகளை கேட்டுப் பெறுவோம்...
திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகளைக் கேட்டுப் பெறுவோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.
சென்னை அசோக் நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், பேரவைத் தோ்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகத்தை சனிக்கிழமை தொடங்கி வைத்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நலன் எவ்வளவு முக்கியமானதோ அதேபோல கூட்டணியின் நலனும் முக்கியமானது. திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது இன்னும் முடிவாகவில்லை. இதனை இழுபறி என கூற முடியாது. விசிகவுக்கு கூடுதல் தொகுதிகளைக் கேட்டுப் பெறுவோம். ஓரிரு நாள்களில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும்.
அதிமுக கூட்டணிக்காக போயஸ் தோட்டத்தை தேடி வந்த காலம் மாறி, தில்லியை நோக்கி அக் கட்சி செல்லும் நிலை உருவாகி உள்ளது. எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமியை பாஜக கிள்ளு கீரையாக நடத்துகிறதோ என்ற எண்ணம் பொதுவெளியில் உருவாகியுள்ளது என்றாா் தொல்.திருமாவளவன்.