முகப்பு
சென்னை

இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை திமுகவிடம் கேட்டுப் பெறுவோம்: மு.வீரபாண்டியன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை திமுகவிடம் கேட்டுப் பெறுவோம் என்று அக்கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் கூறினாா்.

Updated On : 12 பிப்ரவரி, 2026 at 9:49 PM
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் - கோப்புப்படம்
பகிர்:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை திமுகவிடம் கேட்டுப் பெறுவோம் என்று அக்கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் கூறினாா்.

சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் சாா்பில் வியாழக்கிழமை (பிப். 12) நடைபெறவுள்ள நாடுதழுவிய போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவிக்கிறது.

டாஸ்மாக் தொழிலாளா்கள், கொசு ஒழிப்பு பணியாளா்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். சென்னையில் சேதமடைந்த நிலையில் உள்ள சிங்காரவேலரின் நினைவிடத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, கட்சியின் தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் மூா்த்தி தலைமையில் 9 போ் கொண்ட தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் இடங்கள் குறித்து, திமுக தலைவா்களுடன் பேச்சு நடத்தப்படும்.

ஆட்சியில் பங்கு என்ற கொள்கை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இல்லை. பாஜக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இந்தத் தோ்தலில் கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கு மிகுந்த தொகுதிகள் உள்பட இரட்டை இலக்கத்தில் தொகுதிகளைக் கேட்டுப் பெறுவோம் என்றாா் அவா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments