வேலூர்

ஹீலியம் சிலிண்டர் வெடித்த விபத்து: பார்வை பறிபோன மாணவருக்கு உதவிட பலரும் ஆர்வம்

DIN

வேலூரில் தனியார் பள்ளி விழாவில் ஹீலியம் கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் பார்வை பறிபோன மாணவருக்கு உதவிட பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பாகாயத்தில் கடந்த ஜனவரி 31-ஆம் தேதி நடைபெற்ற தனியார் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி ஆண்டு விளையாட்டு விழாவில் ஹீலியம் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் பிளஸ் -1 மாணவர் ஜித்தேஷ் (17) உயிரிழந்தார்.  பலத்த காயமடைந்த சைதாபேட்டை கே.வி.செட்டி தெருவைச் சேர்ந்த சிவலிங்கத்தின் மகன் நவீன் (17) சிகிச்சைக்குப் பிறகு உயிர்பிழைத்தார். எனினும், அவரது பார்வை பறிபோனதுடன் உடல்நிலையும் மோசமானது.
அவருக்கான சிகிச்சை  செலவை ஏற்க பள்ளி நிர்வாகம் கைவிட்ட நிலையில், அவரது பெற்றோர் ஆட்சியரிடம் திங்கள்கிழமை முறையிட்டனர். மேலும், சிகிச்சைக்கு உதவிடக் கோரி மாணவரின் தாய் பொதுமக்களிடம் மடிப்பிச்சை கேட்டு அழுதது பலரையும் பரிதாபத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், விபத்தில் பாதிக்கப்பட்ட மாணவர் நவீன் சிகிச்சைக்கு உதவிட பல்வேறு தரப்பினரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். 
தொடர்ந்து அவருக்கு உதவிட விரும்புவோர் 98437 40901 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT