முகப்பு
வேலூர்

குடியாத்தம் அருகே பிடிபட்ட பாம்புக் குட்டிகள்

குடியாத்தம் அருகே வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் இருந்து 72 பாம்புக் குட்டிகள் வியாழக்கிழமை பிடிபட்டன.

Updated On : 30 மார்ச், 2018 at 2:29 AM
குடியாத்தம்  அருகே  பிடிபட்ட  பாம்புக்  குட்டிகள்.
பகிர்:

குடியாத்தம் அருகே வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் இருந்து 72 பாம்புக் குட்டிகள் வியாழக்கிழமை பிடிபட்டன.
குடியாத்தத்தை அடுத்த இந்திரா நகரைச் சேர்ந்தவர் தொழிலாளி ஜானகிராமன். கடந்த சில நாள்களாக இவரது வீட்டருகே சாரைப்பாம்பு ஒன்று சுற்றித் திரிந்ததாம். இதுகுறித்து ஜானகிராமன் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) மேகநாதன் தலைமையில் வீரர்கள் வியாழக்கிழமை ஜானகிராமன் வீட்டுத் தோட்டத்தில் சோதனையிட்டனர். அப்போது, புதர் மறைவில் ஏராளமான பாம்புக் குட்டிகள் ஊர்ந்து கொண்டிருந்ததைக் கண்டனர். இதையடுத்து அங்கிருந்த 72 பாம்புக் குட்டிகளைப் பிடித்தனர். பின்னர், வனத் துறையினருக்கு தகவல் தெவிரித்தனர். 
வனக்காப்பாளர் வெங்கடேசன் தலைமையில் வந்த வனத் துறையினர், பிடிபட்ட பாம்புக் குட்டிகளை கல்லப்பாடி காப்புக் காட்டில் விட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.